முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் படிவம் வழங்கிய ஆட்சியர்

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் படிவம் வழங்கிய ஆட்சியர்

முதியவர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு படிவம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

85 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் படித்தை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 2024 பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதழில் தர்மபுரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி IAS, தலைமையில் இன்று காலை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உடன் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 40 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு வாக்களிப்பதற்கான படிவங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் இன்று வழங்கினார். மேலும், அவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் வாக்களிக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கி கூறினார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story