கதிர் அடிக்கும் உலர் களம் அமைக்க கூடாது என ஆட்சியரகம் முற்றுகை

கதிர் அடிக்கும் உலர் களம் அமைக்க கூடாது என ஆட்சியரகம் முற்றுகை
கதிர் அடிக்கும் உலர் களம் அமைக்க கூடாது என ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்நூற்றுக்கும் மேற்பட்டோர் மே 24ஆம் தேதி பகல் 1:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் பொழுது தங்கள் கிராமத்தில் மருத்துவமனை மற்றும் குடிநீர் கிணறு உள்ளது இவற்றுக்கு, இடையூறாக கதிரடிக்கும் உலர் களம் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அப்பகுதியில் கதிர் அடிக்கும் உலர் களம் அமைக்க கூடாது என தெரிவித்து, தடுத்துள்ளதாகவும், தற்போது அதனை மீறி மீண்டும் களம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும், மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர், அலுவலர்களுடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story