காற்றோட்டம் இல்லாத உரக்கடையை மூட ஆட்சியர் உத்தரவு

காற்றோட்டம் இல்லாத உரக்கடையை மூட ஆட்சியர் உத்தரவு

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி

ஸ்ரீவைகுண்டத்தில் காற்றோட்டம் இல்லாத உரக்கடையை மூட  மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் குடோனில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த உர மூடைகளை கணக்கெடுத்து அவற்றை பாதுகாப்பாக அகற்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் தாசில்தார் சிவக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய நெல்லை மண்டல மேலாளர் காந்தி ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஸ்ரீவைகுண்டம் டான்பெட் கிட்டங்கியில் சேதமடைந்த உரமூட்டைகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் எதிரே செயல்படும் உரக்கடையை ஆய்வு செய்தனர். அந்தக் கடை காற்றோட்டம் இல்லாத நிலையில் குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டதால் உரமூட்டைகளில் இருந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கெமிக்கல் வாசம் வெளியானது. உடனடியாக அந்த உரக்கடையை மூட உத்தரவிட்டனர். விதிமுறைகளுக்கு உட்பட்டு காற்றோட்ட வசதியை ஏற்படுத்திய பின்னர் தான் அந்த உரக்கடையை திறக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story