விழுப்புரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு !

விழுப்புரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு !

ஆட்சியர் ஆய்வு

விழுப்புரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை கூறிய கலெக்டர் பழனி.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தமல்லி தெருவில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 120 மீட்டர் நீளத்திற்கு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் என்.ஜி.ஜி.ஓ. காலனி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சேதமடைந்த சாலையை பார்வையிட்ட அவர், உடனடியாக அச்சாலையை சீரமைக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சி பூங்காவில் ரூ.2½ கோடி மதிப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டார். அப்போது பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story