குமரியில் பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிய ஆட்சியர்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தக்கலையில் பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களால் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பாக வரையப்பட்ட சுவரோவியத்தினை நேரில் பார்வையிட்டதோடு, கலந்து கொண்ட அனைத்து முதல் வாக்காளர்களை பாராட்டியத்தோடு,

அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சிய ஸ்ரீதர் ஊக்கப்படுத்தினார்.மேலும் 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட முதல் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையினை ஆற்றிடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்களிப்பது நம் அனைவருடைய உரிமை, கடமை, ஒற்றுமை வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டதோடு. பேருந்து பயணம் செய்த பயனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Tags

Next Story