விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட கலெக்டர்

X
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து இன்று 03.02.2024 ம் தேதி பிற்பகல் தமிழக கேரளா அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம்பட்ட 5 பேர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் , 4 பேர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையிலும், 17 பேர்கள் மார்த்தாண்டம் சாலோம் மருத்துவமனையிலும் , ஐசக் மருத்துவமனையில் 1 நபரும், 4 பேர்கள் தக்கலை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் கேரளா அரசு பேருந்து ஓட்டுனர் அனீஸ் கிருஷ்ணா (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மருத்துமனையில் சிகிட்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
Next Story
