திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் தபால் வாக்கு
வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட தமிழக முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பணியில் ஈடுபடக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.
Next Story