உலக சாதனை படைத்த மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு
900 கிலோ எடை கொண்ட காரை 200 மீட்டர் இழுத்து 6 வயது சிறுவன் உலக சாதனை படைப்பு
900 கிலோ எடை கொண்ட காரை 200 மீட்டர் இழுத்து 6 வயது சிறுவன் உலக சாதனை படைப்பு
சிவகங்கையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் - மாரீஸ்வரி தம்பதியரின் மகன் தேவசுகன். 6 வயதான இவர் சிவகங்கை பண்ணை மரிவேணி குலோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மதுரை வல்லபா வித்தியாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வின் போது 900 கிலோ எடையுள்ள காரை 200மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார். இநநிகழ்வு சிவகங்கை தேவஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் மகேஷ்துரை முன்னிலையில் நடைபெற்ற நிலையில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை படைத்த பள்ளி மாணவனை சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பாராட்டி வாழ்த்தினார். இச்சந்திப்பின் போது உலக சாதனையாளரின் பெற்றோர், தேவசுகன் கல்வி கற்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசங்கரி மற்றும் மேதகு திரைப்படக் கதாநாயகன் குட்டிமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags
Next Story