திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவக்கார பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் வருகை பதிவேற்றினை பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்கள் குறித்து பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா கேட்டறிந்தார்

மேலும் எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முட்டாஞ்செட்டி பகுதியில் இணைய வழி பட்டா வரைமுறைப்படுத்தப்பட்ட விவரங்களை கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார் மேலும் காவல்காரப்பட்டி ஊராட்சி வள்ளுவன் நகர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளின் வயதுக்கேற்ப உயரம் மற்றும் எடை குறித்தும் பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வடவத்தூர் ஊராட்சியில் 6.31 லட்சம் மதிப்பீட்டில் ஜம்பு மடைஅரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் ரங்கசாமி தோட்டம் வரை தார் சாலை பலப்படுத்தும் பணி எம் மேட்டுப்பட்டி ஊராட்சியில் 9. 99 லட்சம் மதிப்பீட்டில் பாய் பெட்டிக்கடை முதல் ரெட்டியார் வீடு வரை தார் சாலை பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்

Tags

Next Story