படைவீரர் கொடிநாள் நிதி வழங்க ஆட்சியர் ச.உமா வலியுறுத்தல்

படைவீரர் கொடிநாள் நிதி வழங்க ஆட்சியர் ச.உமா வலியுறுத்தியுள்ளார்

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை கடும் பனிப்பொழிவிலும், மிக அதிகமான குளிரிலும் பாலை வனப்பகுதியில் காணும் கடும் வெப்பத்திலும் தனது சுயநிலத்தைப் பாராது, இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளில் இரவு பகல் பாராது நாட்டினைக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் படைவீரர் கொடி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கொடிநாள் அன்று வசூலிக்கப்படும் தொகை முன்னாள் படைவீரர்களின் நலன்களை பேணிக்காக்கவும் முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே தியாக சுடர்களாக விளங்கும் முப்படை வீரர்களின் நலன்காக்க, படைவீரர் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு தராளமாக நிதி வழங்கிடுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story