ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினரை பதவியிலிருந்து நீக்கிய ஆட்சியர்

ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினரை பதவியிலிருந்து நீக்கிய ஆட்சியர்
பதவி நீக்கம் செய்த அதிகாரி
விருதுநகர் மாவட்டத்தில் புகாரின் பேரில் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியரை தாக்கி அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பனை பதவியிலிருந்து நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் ரா. பிரேம்குமார். இவர் கடந்த ஜன. 10 அன்று அலுவலகத்தில் இருந்த போது, அங்கு வந்த ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.பி. மாரியப்பன் தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரேம் குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.பி. மாரியப்பனை பதவியிலிருந்து மாவட்ட ஆட்சியர் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story