சென்னானூர் கிராமத்தில் முதற்கட்ட அகழாய்வு பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் முதற்கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எட்டு இடங்களில் தொல்லியல் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
அதில் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சென்னூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே எம் சரயு முதற்கட்ட ஆய்வு பணிகளை துவக்கி வைத்து அரிய வகை பழங்கால பொருட்களை பார்வையிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு கால கணிப்பு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது உறுதி செய்ய முடிகிறது. பண்டை தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம், மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்பொழுது2024ஆம் ஆண்டிற்கு ஊத்தங்கரை வட்டம் சென்னூரில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கிராமமான சென்னானூர் அமைந்துள்ளது..