அரசு உடைமைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை ஆட்சியர் தகவல்
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி IAS, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் மெயில் திட்டமானது தமிழ்நாடு இணையதள வளைய அமைப்பு நிறுவனம் மூலம் தற்போது மூலம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கி பணி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கண்ணாடி இலை இணைப்பானது 8 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும் 15 சதவீதம் தரை வழியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சி மையத்தில் நிறுவப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராம ஊராட்சி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம் யுபிஎஸ் மற்றும் உட்பட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாக மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.