பாலாறு தடுப்பணையை ஆட்சியர் ஆய்வு
பாலாறு தடுப்பணையை ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர மாநில எல்லைப்பகுதியான புல்லூர் பகுதியில் உள்ள பாலாறு தடுப்பணை, இந்த தடுப்பணையையொட்டி கனகநாச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது,
இந்த ஆலயத்திற்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து பாலாறு தடுப்பணையில் குளிப்பது வழக்கம், இந்நிலையில் பாலாற்றில் 5 அடியாக இருந்த தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தி தடுப்பணையை கட்டியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த பாலாறு தடுப்பணையில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த பலர் இறந்துள்ளனர்,
இதனால் பாலாறு தடுப்பணையில் ஆழம் அதிகமாக உள்ள பகுதியில் தெலுங்கில் உள்ள அபாய எச்சரிக்கை பாதகை போன்று தமிழிலும் எச்சரிக்கை பாதகை வைக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் விழா காலங்களில் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இரு மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்த நிலையில், இன்று புல்லூர் பாலாறு தடுப்பணையை அருகே உள்ள கனகநாச்சியம்மன் கோவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சாமி தரிசனம் செய்து பின்னர் பாலாறு தடுப்பணையை நேரில் ஆய்வு செய்தார்,
பின்னர் பாலாறு தடுப்பணையில் ஆழமாக உள்ள பகுதிகளில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அபாய எச்சரிக்கை பாதகைகள் வைக்கப்படும் எனவும், மேலும் கோவில் விழாகாலங்களில் தடுப்பணையில் மக்கள் அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் எனவும், மேலும் விழாகாலங்களில் அதிக அளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்...