உயர் மட்ட பாலம் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு!

உயர் மட்ட பாலம் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு!

ஆட்சியர் ஆய்வு 

பாலாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் திருவலம், காட்பாடி, வெங்கடகிரி கோட்டா சாலை, செதுவாலை விரிஞ்சிபுரம் சாலையில் பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 12 கோடி மதிப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் பணிகள் குறித்து ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது உயர்மட்ட பாலம் பணிகள் குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அறிவுறுத்தினார்.



Tags

Next Story