சமய சங்கிலிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்ய சமய சங்கிலிப் பகுதியில் கரும்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளதால், கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக, மற்றும் கரும்புகளை தேர்வு செய்யும் பணிக்காக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா அவர்கள், பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி பகுதிக்கு வருகை தந்தார். அப்பொழுது பொங்கல் கரும்பின் நீளம், தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் அமல்ராஜ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story