தற்காலிக கடைகள் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு

தற்காலிக கடைகள் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

திருவாரூரில் பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகியவை இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற இருப்பதால் வணிகர்களுக்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முதல் காய்கறி மார்க்கெட் வரை இடித்து விட்டு புதிய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது . இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் தற்காலிக கடைகள் அமைக்கும் இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் . இதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் தற்காலிக வணிக மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story