திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய கலெக்டர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

திருவள்ளூரில்75வது குடியரசு தின விழாவில்  மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூவர்ண பலூன்களையும் காற்றில் பறக்கவிட்டு, சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டார். அதனைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் கௌரவித்தார். இதில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலும், . பிற்படுத்ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை உழவர் நல்ததுறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 27 ஆயிரத்து 679 ரூபாய் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 1969 ரூபாய் மதிப்பிலும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு 27 லட்சத்து 91 ஆயிரத்து 91 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கினார்.

அதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ் விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்திரா , சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் ஆகியோர் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story