102 வயது முதியவர் வீட்டிற்கு நேரில் சென்று கலெக்டர் ஆய்வு

அஞ்சல் வாக்கு படிவம் வழங்கிய ஆட்சியர்
நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்த படியே வாக்குகளை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி, கிச்சிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குப்பதிவைச் செலுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், வாக்காளர் பட்டியலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத நிலையில் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கென நியமிக்கப்ட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 12டி விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடையவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரித்து அதனை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டு தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் வீட்டிலிருந்தவாறே அஞ்சல் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனக்கூறினார்.
