தாயம் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இளம் வாக்காளர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று ஊட்டி முள்ளிக்கொரை அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள 81 முதியோர்களிடம், நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறித்தியும், அவர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அருணா கேரம்போர்டு மற்றும் தாயம் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் இல்லத்திலுள்ள அனைத்து முதியோர்களும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். முதியோர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மேலும் தேர்தலில் வாக்களிப்பது சம்பந்தமாக முதியோர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.