காஞ்சியில் அதிமுக நிர்வாகியை வெளியேற்றிய ஆட்சியர்

காஞ்சியில் அதிமுக நிர்வாகியை வெளியேற்றிய ஆட்சியர்

வேட்புமனு தாக்கல் 

காஞ்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலக அறைக்குள் வந்தபோது கூடுதலாக ஒரு நபர் வந்ததை அறிந்த தேர்தல் அலுவலர் உடனடியாக வேட்பாளரிடம் கூடுதலான நபரை அனுமதிக்க இயலாது என கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தொடங்கியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மூன்று தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி பணிபுரிவார் எனவும், வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலக அறைக்குள் வந்தபோது கூடுதலாக ஒரு நபர் வந்ததை அறிந்த தேர்தல் அலுவலர் உடனடியாக வேட்பாளரிடம் கூடுதலான நபரை அனுமதிக்க இயலாது என கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இ

தன்பின் வேட்பாளரின் உடன் வந்த மாவட்ட செயலாளர் கூடுதல் நபரை வெளியே நிற்குமாறு கூறிய பின் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் கேமராக்கள் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதும் , எந்த ஒரு நடத்தை விதி மீறல்களும் காஞ்சிபுரத்தில் இருக்காது என ஏற்கனவே தேர்தல் அலுவலர் அறிவிக்க நிலையில் இன்று நடைபெற்ற சம்பவமும் அதை உறுதி செய்தது.

Tags

Next Story