செவிலியர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கிய ஆட்சியர்

செவிலியர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கிய ஆட்சியர்

மடிக்கணினி வழங்கல் 

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை ஆய்வுக்கூட்டத்தில் பகுதி செவிலியர்களுக்கு மடிக்கணிணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி செவிலியர்களுக்கு மடிக்கணிணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் என்ற விதத்தில் பகுதி சுகாதார செவிலியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களில் பணியை மேற்பார்வையிடுதல் இவர்களின் பணியாகும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 29 மடிக்கணிணிகள் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி மேற்பார்வையிடும் பணியை செவ்வனே செய்ய அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் துணை இயக்குநர் மரு.அஜிதா, இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் மரு.ராஜா, துணை இயக்குநர் மரு.நெடுஞ்செழியன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story