ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த ஆட்சியர்
பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எசனை கீழக்கரை கிராமத்தில் மதவாணையம்மன் ஏரியின் வடிகால் வாய்க்காலினை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் கற்பகம், . தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை 2024-2025 ஆம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் நீர் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 823 பணிகளை 4542.33 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.95 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி . தமிழக முதலமைச்சரால் ஆணை வெளியிடப்பட்டது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 20 வாய்க்கால்களை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் எசனை கீழக்கரை மதவாணையம்மன் ஏரியின் வடிகால் வாய்க்காலினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், வரத்து வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி . பக்க கரையை வலுப்படுத்த வேண்டும்கரையை வலுப்படுத்த வேண்டும், வடிகால் வாய்க்காலினை முழுமையாக அளந்து, ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை எடுத்து மழைக்காலங்களில் நீர் முழுமையாக கடைநிலை வரை சென்று சேரும் வகையில் தூர்வார வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவர் மீனாஅண்ணாதுரை, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன். உதவிப்பொறியாளார் மருதமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.