வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் மற்றும் நியாயமான உணர்வோடு வாக்களிப்பதையும் வலியுறுத்தி “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற தலைப்பில் செல்பி ஸ்டாண்டினை துவக்கி வைத்து, புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் நியாயமான உணர்வோடு வாக்களிப்பதையும் வலியுறுத்தி “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நிச்சயம் வாக்களிப்பேன்” என்ற தலைப்பில் செல்பி ஸ்டாண்டும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படைதன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story