வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
திருப்புட்குழி ஊராட்சியில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, திருப்புட்குழி ஊராட்சியில், 1.3 கோடியில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செயல்படும் சித்த மருத்துவம், பல் சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ மற்றும் ஸ்கேன் அறைகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 93 லட்சம் ரூபாயில் கட்டப்படும் கூடுதல் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்து, அங்கு நடத்தப்படும் தொழில்நுட்ப வகுப்பை மாணவர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். மதிய உணவின் தரத்தையும் அப்போது சோதித்து பார்த்தார். பெருமாள் கோவில் தெரு, அண்ணா நகர் மற்றும் புதுாரில் அமைக்கப்படும் கான்கிரீட் சாலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முசரவாக்கம் பெரிய ஏரியிலும், கால்வாய் ஆழப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார்."
Next Story