நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 172 பயனாளிகளுக்கு ரூ.7.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 362 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தலா ரூ.4000/- வீதம் 142 நபர்களுக்கு காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,349/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் 10 நபர்களுக்கும், தலா ரூ.6,840/- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும் தலா ரூ.2,780/- மதிப்பிலான காதொலி கருவி 5 நபர்களுக்கும், தலா ரூ.950 மதிப்பிலான மடக்கு வாக்கர் 10 நபர்களுக்கும் என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags

Next Story