திருவாரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவாரூரில் நலத்திட்ட உதவிகளை  வழங்கிய ஆட்சியர்
X

நலத்திட்ட உதவி வழங்கல்


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.இக் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 20 நபர்களுக்கு தலா ரூபாய் 6,000 மதிப்புள்ள இலவச தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story