சிறந்த பள்ளிகளுக்கு பரிசு தொகை வழங்கிய ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பரிசுத்தொகையை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில்(2023-2024) பள்ளிகளில் அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர் சேர்க்கை, உட்கட்டமைப்புகளை விரிவாக்குதல், கற்றல் கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்துதல், மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை அதிகரிக்கச் செய்தல், ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த பள்ளிகளை காமராஜர் விருதுக்கு தேர்வு செய்து, பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,00,000, கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75,000, திண்டுக்கல் புறநகர் உண்டார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000, வேடசந்துார் செல்லக்குட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000 என பரிசுத் தொகைக்கான காசோலைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story