தருமபுரியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தருமபுரியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் உள்வட்டம், நல்லகுட்லஅள்ளி தரப்பு, அஸ்தகிரியூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் 07.01.2021 அன்று பென்னாகரம் வட்டம் ஊட்டமலை காவேரி ஆற்றில் மூழ்கி எதிர்பாராத விதமாக இறந்தமைக்கு,

அவரது தந்தை கோவிந்தசாமி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-க்கான காசோலையினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

பின்னர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் சங்கரன், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் எஸ். பொன்னப்பன் ஆகியோர் தங்களுடைய 20 வருட பணிகாலத்தில் விபத்து ஏற்படாமல் மாசற்று பணிபுரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுசான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலர்கள்,சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட தொடர்புடைய கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story