விருதுநகர் - வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் - வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார அரசு சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும்,15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.18.50 இலட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும், எட்டக்காபட்டி ஊராட்சியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.3.35 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புரணமைக்கப்பட்டு வருவதையும், எதிர்கோட்டை ஊராட்சியில் கனிமவள நிதியின் கீழ் ரூ.3.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புரணமைக்கப்பட்டு வருவதையும், ரூ.35 இலட்சம் மதிப்பில் அரசு துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும், குண்டாயிருப்பு கிராம்மத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.90 இலட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும், கனிமவள நிதியின் கீழ் ரூ.128.10 இலட்சம் மதிப்பில் 21 திருநங்கைகளுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.58 இலட்சம் மதிப்பில் வரத்துக்கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.மேலும், கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டு, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story