வீ. கே. புதூரில் இரவில் தங்கி ஆய்வு செய்த ஆட்சியர்

வீ. கே. புதூரில் இரவில் தங்கி ஆய்வு செய்த ஆட்சியர்
வீ. கே. புதூரில் இரவில் தங்கி ஆய்வு செய்த ஆட்சியர்
தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இரவில் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டு மென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை, சிவகுருநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையினையும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டம் 2023-2024 -ஆம் ஆண்டின் மூலம் ரூ. 232 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 12 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தினையும், துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிதம் மானியத்தில் வழங்கப்படும் விவசாய பொருட்களை யும்ஆய்வு செய்த ஆட்சியர் இரவு இப்பகுதியில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

Tags

Next Story