குமரியில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாட்டம்- கலெக்டர் அறிவிப்பு
குமரியில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாட்டப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு
தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு 18.12.2023 முதல் 27.12.2023 வரை மாவட்டங்களிலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்படவுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு குறித்தும், பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சியளித்தும், இந்நிகழ்ச்சிக்குத் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story