ஊத்துமலையில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

ஊத்துமலையில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம்

மனுநீதி நாள்

தென்காசி மாவட்டம், ஊத்துமலையில் நடைபெற்ற ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முன்னிலை வகித்தாா். முகாமில், முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. 4 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, சமூக நலத் திட்டம் மூலம் 6 பேருககு உதவித்தொகைக்கான ஆணை, 15 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 59 பேருக்கு ரூ. 2.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கிப் பேசினாா். தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தெய்வ குருவம்மாள், வேளாண் துறை இணை இயக்குநா் பத்மாவதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முரளிராஜா, மலா்க்கொடி, ஊத்துமலை ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story