அரக்கோணம் வேட்பாளர்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
ஆட்சியர் வளர்மதி
அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவினங்களை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவின கணக்குகள் இன்று ஆய்வு செய்யப்படுகிறது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் சிவசங்கர் யாதவ், மேவா ராம் ஓலா ஆகியோர் காலை 10 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் முதல் கட்டமாக ஆய்வு செய்கின்றனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் முறையே 10-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் செலவின கணக்குகளை உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Next Story