வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் வட்டார பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். பூண்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13.32 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரி புனரமைக்கும் பணி. அம்மையகரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு தகன மேடை கட்டுமான பணி மற்றும் நைனார்பாளையத்தில் நெகிழி கழிவு மேலாண்மை கூடத்தில் நெகிழிவுகள் மறுசுழ்சி செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார். பின், சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர்களுக்காக 5 கோடியே 7 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 88 வீடுகளின் கட்டுமான பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிகளில் சாலை மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
Next Story