ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் 

ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் 

தீத்தடுப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு குழுவினருடன் ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.


தீத்தடுப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு குழுவினருடன் ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்கசிவு மற்றும் தீ விபத்துக்கள் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான தீத்தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவினருடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தீ பாதுகாப்பு தொடர்பான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் (SOP) செயல்படுத்தப்படுவதை குழு உறுப்பினர்கள் கண்காணித்திட வேண்டும். ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் ஒருமுறை இக்குழுவானது கூடி, நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி அனைத்து அம்சங்களையும் விவாதித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்திடல் வேண்டும்.

கோடைகாலமாக உள்ளதால், பட்டாசு உற்பத்தி செய்யும் மற்றும் சேமித்து விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள உரிமதாரர்கள் மற்றும் வெடிபொருட்கள் சேமித்து விற்பனை செய்யும் உரிமதாரர்கள் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சேமிப்பு கட்டடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.அனைத்து வெடிமருந்து உற்பத்தி நிலையங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவற்றைக் கையாள பயிற்சி அளித்திருக்க வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள் காலாவதியான பின் முறையாக அழிக்கப்படவேண்டும். வெடிமருந்து உரிமம் வழங்கப்பட்ட தொழிலகங்களில் 18 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணிபுரியக்கூடாது, இதனை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். தீ மற்றும் வெடிமருந்து விபத்துக்கள் ஏற்படாதவாறு வெடிமருந்து கிடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறையினரால் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தற்போது வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பட்டாசு வெடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்திடல் வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்கவேண்டும்.

வெப்ப அலை காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு, அவசர சிகிச்சைகள், குழந்தைகள் சிகிச்சைகள் உள்ளிட்ட பிரிவுகளில் மின் இணைப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின் இணைப்பு பாதிப்பு ஏற்படும் நேர்வில், உடனடியாக மருத்துவ சேவையை தொடரும் வகையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்திட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். மதுபானக்கடைகளுக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்குகளில் தீ விபத்துக்கள் நிகழாதவாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வணிக வளாக கட்டிடங்களில் தீ பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story