விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி துறையில் ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம், மானியத்துடன் கூடிய கடன் திட்டம், விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் விசைத்தறிகளுக்கு 50% மானியத்துடன் எலக்ட்ரானிக் பேனல் போர்டு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விசைத்தறி நெசவாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பெற்றிட மற்றும் மேலும் விவரங்களுக்கு 0416 224 2547 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Next Story