பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு
ஆட்சியர் பிரபு சங்கர்
திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இரா அன்பரசி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகளுக்குரிய காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் வழங்கிப் பாராட்டினார்.
போட்டிகளில் பரிசுப்பெற்ற மாணவர்களின் விவரம் வருமாறு: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 டிஆர்பிசிசிசி இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி பா.ஸ்ரீநிதி, 2ம் பரிசு ரூ.7,000 திருவள்ளூர், கமுந சகோதரர்கள் நகராட்சி மேனிலைப் பள்ளி மாணவி செ.கீர்த்திகா, 3ம் பரிசு ரூ.5,000 கே.ஜி.கண்டிகை, அரசினர் மேனிலைப் பள்ளி மாணவி ரா.ச.செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் பெற்றனர். அதே போல் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 கே.ஜி.கண்டிகை, அரசு மேனிலைப் பள்ளி மாணவி கோ.சத்யா, 2ம் பரிசு ரூ.7,000 திருவள்ளூர், டிஆர்பிசிசிசி இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி அ.ர.ஹரிப்ரியா, 3ம் பரிசு ரூ.5,000 திருவள்ளூர், டிஆர்பிசிசிசி இந்து மேனிலைப் பள்ளி மாணவி மா.நளினி பெற்றனர். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 திருவள்ளூர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.சந்தோஷ், 2ம் பரிசு ரூ.7,000 திருவள்ளூர், கமுந சகோதரர்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் நே.சிவசங்கர், 3ம் பரிசு ரூ.5,000 ஆவடி விஜயந்தா நன்மாதிரி மேனிலைப் பள்ளி மாணவர் கோ.ராம்குமார் ஆகியோர் பெற்றனர்.
இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பூந்தமல்லி, நசரத்பேட்டை, எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி மாணவர் த.நரேந்தர், 2ம் பரிசு ரூ.7,000 நூம்பல், சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பி.பிரியதர்ஷினி, 3ம் பரிசு ரூ.5,000 ஆவடி, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி மாணவி ரா.தேவயானி ஆகியோர் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 திருத்தணி, தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மா.ஹரிணி, 2ம் பரிசு ரூ.7,000 வானகரம், அப்போலோ செவிலியர் கல்லூரி மாணவி ஹ.ஸ்ரீஹரிணி, 3ம் பரிசு ரூ.5,000 மதனங்குப்பம், சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ர.லோகேஷ்வரி ஆகியோர் பெற்றனர். பேச்சுப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் செ.சிவன், 2ம் பரிசு ரூ.7,000 பொன்னேரி, உலகநாத நாராயணசுவாமி கலைக் கல்லூரி மாணவி மு.தாமரைச்செல்வி, 3ம் பரிசு ரூ.5,000 திருநின்றவூர், ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர் மூ.சந்தோஷ் பெற்றனர்.