செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் அறிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில், காலை உணவு திட்டத்தில் 3 ஆண்டுகளில், 611 பள்ளிகளில், 39,002 மாணவர்கள் பயன்பெற்றனர். 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், 4.5 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில், 574 பள்ளிகள் மற்றும் அச்சிறுபாக்கம்,
இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில், 37 பள்ளிகள் என, மொத்தம் 611 பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், 39,002 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், 3 ஆண்டுகளில், எட்டு வட்டாரத்தில், 4.5 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
இதில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை, மக்களுக்கு வீடு தேடி சென்று அளித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.