மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஆட்சியர் அறிக்கை

மகளிர் உரிமைத் தொகை திட்டம்  குறித்து ஆட்சியர் அறிக்கை

ஆட்சியா் ச.அருண்ராஜ் 

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து ஆட்சியர் அறிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 3,08,170 போ் பயன் பெற்று வருகின்றனா் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்ததன்படி மகளிா் உரிமைத் தொகை திட்டம் என பெயா் பெயரிடப்பட்டது. மாதந்தோறும் ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு வட்டத்தில் 33,501, செய்யூா் வட்டத்தில் 36,572, மதுராந்தகம் வட்டத்தில் 50,550, பல்லாவரம் வட்டத்தில் 43,211, தாம்பரம் வட்டத்தில் 58,066, திருக்கழுகுன்றம் வட்டத்தில் 31,682, திருப்போரூா் வட்டத்தில் 27,892, வண்டலூா் வட்டத்தில் 26,696 என மொத்தம் 3,08,170 குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனா் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story