வாக்கு எண்ணு மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !

வாக்கு எண்ணு மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திரகுமார் வர்மா, முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியானது பெரம்பலூர், துறையூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி மற்றும் குளித்தலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள், தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்று வருவதற்காக ஏற்படுத்தப்பட்டு வரும் பிரத்யேக வழிகள், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு வரும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும் வாகனங்கள் முறையாக உள்ளே வந்து வெளியேறுவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாகனங்கள் வரும் என்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அனைத்து வாகனங்களும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்து மீண்டும் வெளியேறுவதற்கு தேவையான முன்னேற்பட்டு பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கு ஏதுவாக குறியீடுகள் இடப்பட்டுள்ளதையும், வாக்கு எண்ணும் அறைகளுக்குள் பாதுகாப்பு இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுவருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், வட்டாட்சியரகள் சரவணன், மாயகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story