வந்திராயிருப்பு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளதையும்,
வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், வெள்ளப்பொட்டல் ஊராட்சியில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தை பழுதுபார்த்து,
வண்ண பூச்சு அடிக்கப்பட்டு வருவதையும், காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் காடனேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,
ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் தளம் கட்டப்பட்டுள்ளதையும், கோட்டையூர் ஊராட்சியில், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், தம்பிபட்டி ஊராட்சியில்,
அரசு பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்தமாக தூய்மைபடுத்துதல் திட்டத்தின் கீழ், ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் தம்பிபட்டி நடுநிலைப்பள்ளியில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், மகாராஜபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு மானியத்தில் இலவச வீட்டு கட்டப்பட்டு வருவதையும், இராமசாமிபுரம் ஊராட்சியில்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.45 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.46 இலட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டப்பட்டு வருவதையும்,
குன்னூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில், நியாயவிலை கடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.