ஒரத்தநாட்டில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு 

ஒரத்தநாட்டில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு 

ஆட்சியர் ஆய்வு 

ஒரத்தநாடு வட்டத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஜூன்.19, 20 இரு நாட்களில் பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்தும், உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் செயல்படுகிற அரசுக் கல்லூரி மாணவியர் விடுதியில் கல்வித்தரம் குறித்தும், உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை குறித்து நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

ஒரத்தநாடு வடக்குத் தெருவில் பொதுமக்களிடம் தூய்மைப் பணிகள் முறையாக தொடர்ந்து நடைபெறுகிறதா என கேட்டறிந்தார். தெலுங்கன்குடிக்காடு ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், தெலுங்கன்குடிக்காடு தொடக்கப் பள்ளி, ஒரத்தநாடு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதையும், ஒரத்தநாடு தேர்வுநிலை பேரூராட்சியில் ஆர்.வி நகரில் சிறுவர் பூங்கா, சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story