மணம்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஆட்சியர் வருகை
ஆய்வு
மணம்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஆட்சியர் ஆய்வு.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனி. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகுட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தவுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து 343 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 371 VVPAT எந்திரங்களும் இரண்டு கண்டைனர் லாரிகளில் மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதனையடுத்து, அங்கு அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் இரண்டு வாகனத்திலிருந்தும் சீல் பிரிக்கப்பட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதன் பாதுகாப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story