கல்லூரி முன்னாள் மாணவா் சங்க செயற்குழுக் கூட்டம்
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் குற்றாலம் ஐந்தருவியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் எஸ்.வி. பெருமாள் தலைமை வகித்து, சங்கத்துக்கான புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். மீனாட்சிசுந்தா், சங்க துணைத் தலைவா் எஸ். தங்கம், துணைப் பொதுச் செயலா் எஸ். முருகேசன் முன்னிலை வகித்தனா். கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவா், மாணவிகளுக்கு, அம்மாணவா்களின் மூன்றுஆண்டுகால கல்வி செலவுகளை முழுமையாக செலுத்துவது, மாணவா், மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம், போட்டித் தோ்வுகளில் கலந்துகொண்டு எளிதாக தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. செயற்குழு உறுப்பினா்கள் சங்கரலிங்கம், அருள்ராஜ், காந்திமதிநாதன், ஹரிகிருஷ்ணன், அருமைராஜ், சக்தி, செய்யதுசுலைமான், சக்திவேல், வட்டார செயலா்கள் அம்பலவாணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story