முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1999-2002-ம் ஆண்டில் பயின்ற சுமார் 100 -க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதற்கான விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர் பி.பூபதி தலைமை வகித்தார். இதனை தொடர்ந்து இதில் பங்கேற்றவர்கள் கல்லூரி நாட்களில் நடந்த மாணவப் பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினர். மேலும் தொடர்ந்து மாணவர்களுக்குள் ஒருங்கிணைப்பு செய்து கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினர்.
இதற்கான விழாவில், இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களும் தற்போதைய அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர்களுமான முனைவர் ஆர்.சிவக்குமார், கரூர் அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசியர் அலெக்ஸாண்டர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, வருங்கால மாணவ சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாம் பயின்ற கல்லூரி வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்வது நமது வாழ்நாள் கடமையாக கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பி.பூபதி, கார்த்திக் ,சையத் முபாரக் , அசோக் குமார், யுவராஜ், வசந்தகுமார், விஷ்ணு மூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர்.