கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை தரக்குறைவாக பேசிய, வரலாறு துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை தரக்குறைவாக பேசிய வரலாற்று துறை தலைவர் பொறுப்பு பேராசிரியர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8500 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் 13 துறைகளுடன் செயல்படும் கல்லூரியில் முதல்வர் உட்பட 52 பேர் நிரந்தர பேராசிரியர்களாகவும் 153 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வரலாற்று துறை சார்பாக மன்ற கூட்டம் நடைபெறும் போது 953 வரலாற்று துறை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
வரலாற்று துறை சார்பாக 15 கெளரவ விரிவுரையாளர்கள் மற்றும் 7 பேராசிரியர்கள் பங்கேற்றனர் அப்போது பேசிய வரலாற்று துறை தலைவர் பொறுப்பு பேராசிரியர் சதீஷ்குமார் கௌரவ விரிவுரையாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதால் கௌரவ விரிவுரையாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கல்லூரி வாயில் முன் கௌரவ விரிவுரையாளர்கள் ஒன்று கூடி வாயில் முழக்கப் போராட்டம் நடத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வரலாற்று துறை தலைவர் பொறுப்பு சதீஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.