வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுடன் ஆய்வு பயிற்சி

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுடன் ஆய்வு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் 108 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளுடன் இணைந்து விவசாயம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இறுதி ஆண்டு படிக்கும் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் 10 குழுக்களாக பிரிந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுடன் இணைந்து 60 நாட்களுக்கு விவசாய பணிகளை குறித்து ஆய்வு பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் 12 மாணவிகள் அடங்கிய ஒரு குழுவினர் விவசாயிகளுடன் இணைந்து, பல்வேறு வகை பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சமூக மற்றும் வளங்களின் வரைபடம், பயிர்வள பகுப்பாய்வு விவசாயிகளின் அன்றாட நடவடிக்கைகள், காலவரிசை, சிக்கல் பகுப்பாய்வு விளக்கப்படம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராமபுற மதிப்பீடு நுட்பங்களை குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் வேளாண்மை உதவி இயக்குனர் தினேஷ், உழவர் உற்பத்தி அமைப்பு தலைவர் விநாயகமூர்த்தி,கால்நடை மருத்துவர் மாதரசன், கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
