குமரி அருகே கல்லூரி மாணவி தீயில் கருகி உயிரிழப்பு
கோப்பு படம்
கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சு கூட்டு தேரி விளைப்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகள் சரண்யா (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் மைக்ரோபயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள்.
கடந்த வாரம் நாய் உடலில் ஒட்டுண்ணி பரவியது. இதையடுத்து சம்பவத்தன்று பேப்பரில் தீயை பற்ற வைத்து நாயின் ஒட்டுண்ணியை அகற்றும் பணியில் சரண்யா ஈடுபட்டிருந்தார். அப்போது பேப்பரில் வைத்த தீ இவரது ஆடையில் பிடித்தது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் பரவி சரண்யா அறினார்.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்து சரண்யாவை மீட்டு உடல் கருகிய நிலையில் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண்யா உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சரண்யா இறந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.