கழிவறையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கழிவறையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தனுஷ்

கோவையில் கழிவறையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் என்பவர் கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ் சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைதானத்திலிருந்து விடுதியின் கழிவறைக்கு மாணவர் சென்ற பொழுது திடீரென அங்கு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.இதில் தலைப்பகுதியில் மாணவர் தனுஷிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர்.ஆனால் அவர் இறந்துவிட்டதாக கூறவே மாணவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோவை அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர் தனுஷ் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்கவில்லை எனவும் மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கல்லூரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவும் மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டதாகவும் அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிற்காக அழைத்துச் சென்ற நிலையில் மாணவரின் உயிர் பிரிந்து விட்டதாகவும் கல்லூரியில் சிறப்பாக படிக்கக்கூடிய மாணவன் தனுஷ் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். கல்லூரியில் வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story